இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா 'ரப் நே பனா தி ஜோடி' என்ற படத்தின் மூலம் அறிமுகமானர்.
இந்நிலையில், ஃபர்ச்சூன் இந்தியா பத்திரிகை 2019ஆம் ஆண்டின் மிக வலிமையான பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அனுஷ்கா சர்மா 39ஆவது இடத்தை பிடித்துள்ளார். இது குறித்து ஃபார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், சர்மா நிவ்யா, எல்லே 18, மின்த்ரா, லெவி போன்ற பல பிரண்டுகளின் விளம்பரத் தூதராக திகழ்ந்தார். அது மட்டுமில்லாது தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.
அவரது தயாரிப்பு நிறுவனமான கிளீன் ஸ்லேட் ஃபிலிம்ஸ் மூலம் என்ஹெச் 10, பில்லாரி, பரி ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மேலும் நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்து இணைய தொடரையும் தயாரித்து வருகிறார்.
இதனால் இந்தியாவின் வலிமையான பெண்களின் பட்டியலில் அனுஷ்கா சர்மா இடம் பெறுகிறார். இவரின் வணிக புத்திசாலித்தனமும் சமூக கலாசார பண்பு காரணமாகவும் ஃபர்ச்சூன் இந்தியா வலிமையான பெண்ணாக கெளரவிப்பதாக தெரிவித்துள்ளது.