ETV Bharat / sitara

#HbdAngelinajolie - மனிதத்தின் அவசியத்தை உணர்த்தும் ஏஞ்சல்

ஆஸ்கார் விருது வென்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி பிறந்ததினம் (ஜூன் 4) இன்று. மனிதத்தின் அவசியத்தை உணர்த்த அவர் ஆற்றிய பங்களிப்பு பற்றிய சிறப்புத் தொகுப்பு.

Angelina
author img

By

Published : Jun 4, 2019, 3:12 PM IST

1975ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் ஏஞ்சலினா ஜோலி. உலகப் புகழ்பெற்ற கதாநாயகி, இயக்குநர், மாடல் என்பதைத் தாண்டி ஏஞ்சலினாவுக்கு மற்றொரு முகம் உண்டு. ஹாலிவுட் திரையுலகில் உள்ள வெகுசில மனிதநேய ஆர்வலர்களில் ஏஞ்சலினா ஜோலி மிகவும் முக்கியமானவர்.

Angelina jolie
ஆதரவற்ற குழந்தைகளுடன் அன்பைப் பகிரும் ஏஞ்சலினா

கருவுற்றால் ஒரு குழந்தைக்கு மட்டும்தான் அன்னையாக முடியும், கருணையுற்றால் ஆயிரம் குழந்தைகளுக்கு கூட அன்னையாக முடியும்! என்ற அன்னை தெரசாவின் கூற்றுக்கு ஏற்ப வாழ்ந்துவருகிறார் ஏஞ்சலினா ஜோலி. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகையாகத் திகழும் ஏஞ்சலினாவின் வாழ்க்கையை மாற்றியது கம்போடியா.

மனிதநேயத்தின் முதல் புள்ளி

Angelina jolie
குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் ஏஞ்சலினா

ஏஞ்சலினாவின் டூம்ப் ரெய்டர் (Tomb raider) படப்பிடிப்பு கம்போடியா நாட்டில் நடைபெற்றபோது, அங்கிருந்த மக்களின் அவலநிலை அவர் மனதை மிகவும் பாதித்தது. உலகம் முழுவதும் மனிதநேய ஆர்வலர்களின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை அவருக்கு அந்தத் தருணம் உணர்த்தியது. ஏஞ்சலினா உடனடியாக தொண்டு செய்யும் பணியில் களமிறங்கினார்.

ஆதரவற்றோர், அகதிகள், புற்றுநோயாளிகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்கள், இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாலியல் கொடுமைகளுக்கு ஆளானவர்கள், கல்வியறிவு பெற முடியாதவர்கள் என ஏஞ்சலினாவின் தொண்டு நிறுவனங்கள் இப்படி பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவிப்பவர்களுக்கு உதவி செய்துவருகின்றன.

2001ஆம் ஆண்டு முதல் அகதிகள் பாதுகாப்பை வலியுறுத்தி அவர் கம்போடியா, இந்தியா, பாகிஸ்தான், ஈராக், சிரியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயணித்திருக்கிறார். அவரின் சேவையைப் பாராட்டும் விதமாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (UNHCR) நல்லெண்ண தூதர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்மூலம் அகதிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அகதிகளுக்கான மரியாதையை பெற்றுத்தரவும் அயராது பாடுபட்டார்.

Angelina jolie
தனது குழந்தைகளுடன் ஏஞ்சலினா

மேடாக்ஸ், சஹாரா, பேக்ஸ் என மூன்று குழந்தைகளை அவர் தத்தெடுத்தார். கம்போடியாவில் இருந்து முதலாவதாக தத்தெடுத்த மோடாக்ஸ் பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி, கம்போடியாவின் சமுதாய வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவிவருகிறார்.

கல்விக் கண் திறந்த ஏஞ்சலினா

Angelina jolie
குழந்தைகளுடன் மகிழ்ச்சியான தருணத்தில் ஏஞ்சலினா

வன்முறை நிறைந்த இடங்களில் வாழும் குழந்தைகளின் கல்வியை மனதில் கொண்டு education partnership for children of conflict என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினார். அதைப் பார்த்து உத்வேகமடைந்து பல தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் அக்குழந்தைகளுக்கு உதவ முன்வந்தன. தற்போது கிட்டத்தட்ட 7 லட்சம் குழந்தைகள் இதன்மூலம் லாபமடைந்து வருகின்றனர்.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகள் முகாம்களை பார்வையிட்டு, அம்மக்களின் நலனுக்காக 10 லட்சம் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கினார்.

மக்களுக்கான மருத்துவ உதவியில் ஏஞ்சலினா பங்களிப்பு

Angelina jolie
அகதிகள் மத்தியில் ஏஞ்சலினா

ஏஞ்சலினாவின் தாயார் கர்ப்பப்பை புற்றுநோயால் உயிரிழந்தவர். தாயின் நினைவாக ஏஞ்சலினாவும் அவரது தம்பியும் சிடார்-சினாய் மருத்துவ மையத்துக்கு நன்கொடை அளித்துவருகின்றனர்.

வறுமையை நீக்கவும், சுற்றுச்சூழல், வனவிலங்கு பாதுகாப்பை வலியுறுத்தியும் ஜோலி-பிட் என்ற தொண்டு நிறுவனம் அவரால் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொற்றுநோய், ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, போர் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் டாக்டர்ஸ் வித்-அவுட் பவுண்ட்ரிஸ் என்ற அமைப்புக்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களை வழங்கியது.

2006ஆம் ஆண்டு ஏஞ்சலினா, அவரது காதல் கணவர் பிராட் பிட்டின் ஒட்டுமொத்த வருமான வரி ஆவணங்களில் தொண்டு நிறுவனங்களுக்கு அளித்த பண மதிப்பு மட்டும் 80 லட்சம் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

வன்முறைக்கு எதிரான ஏஞ்சலினா

Angelina jolie
படப்பிடிப்பு தளத்தில் ஏஞ்சலினா

2011ஆம் ஆண்டு வெளியான In The Land of Blood & Honey என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஏஞ்சலினா. பால்கன் போர்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம், ராணுவ ஆட்சி நடக்கும் போஸ்னியா பற்றிய விழிப்புணர்வையும், அங்கு ராணுவத்தினரால் நிகழ்த்தப்படும் காட்டுமிராண்டித்தனத்தையும் சுட்டிக்காட்டியது.

போர் மண்டலங்களில் நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக இவர் பரப்புரை செய்ததை பாராட்டி, 2014ஆம் ஆண்டு The Order of St Michael and St George-இன் கவுரவ தளபதியாக நியமிக்கப்பட்டார்.

Angelina jolie
ஏஞ்சலினா ஜோலி

உலகம் முழுவதும் ஏஞ்சலினா ஜோலியின் தொண்டு நிறுவனங்களால் பலரும் பயனடைந்துவருகின்றனர். புகழ்பெற்ற திரைப்பட நடிகை என்ற பிம்பத்தை உடைத்து கோடிக்கணக்கான மக்களின் நேசத்திற்குரிய மனிதநேய ஆர்வலராக வலம்வரும் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.