மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ’ஹெலன்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான திரைப்படம், ’அன்பிற்கினியாள்’. தந்தை மகள் பாசத்தைக் கொண்ட இப்படத்தில் அருண்பாண்டியன் தந்தையாகவும், கீர்த்தி பாண்டியன் மகளாகவும் நடித்திருந்தனர்.
கோகுல் இயக்கியுள்ள இப்படம் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. கீர்த்தி பாண்டியனின் நடிப்பும் வெகுவாக பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அன்பிற்கினியாள் திரைப்படம் தற்போது அமேசான் ஃப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தை வெளியிடும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பார்த்திபனுக்கு திடீர் ஒவ்வாமை!