ஈரோட்டில் உள்ள பிரபல தனியார் கல்லூரி, ஈரோடு மாவட்ட புற்றுநோய் மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் நடிகர் ஆனந்த் பாபு இன்று கலந்துகொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆனந்த்பாபு, ”மகளிர் தினத்தன்று புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து நிகழ்ச்சி நடத்தப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. விழிப்புணர்வினை பெறும் பொதுமக்கள், புற்றுநோய் பாதிப்பைக் குறைப்பதற்கான உணவு வகைகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்ந்திட வேண்டும்” என்றார்.
இதையடுத்து அவரிடம், கமல்ஹாசன் கட்சி தொடங்கியுள்ளது குறித்தும், ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது ”பெரியவர்கள் எடுத்த முடிவு அவர்களுக்கு சரியானதாக இருந்தால், அது சரியானதாகத்தானிருக்கும். பொதுவானவர்கள் கருத்து கூறமுடியாது, அது அவர்கள் எடுக்கும் முடிவு. இருவரும் இணைந்து செயல்பட வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக சேரலாம். அரசியல் நிமிடத்திற்கு நிமிடம் மாறக்கூடியது என்பதால், அந்தந்த நேரத்தில், அந்தந்த காலத்தில் அவர்கள் முடிவெடுப்பார்கள். தற்போது நன்றாக சென்று கொண்டிருப்பதை நாம் தலையிட்டு கெடுத்துவிடக் கூடாது என்பதால் அதில் தலையிட வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தனுஷூக்கு ரெடியான 2 பாடல்கள்... ட்யூனுடன் சஸ்பென்ஸ் வைத்த ஜி.வி. பிரகாஷ்