ETV Bharat / sitara

"இயக்குநர் பாலா சார் பாராட்டியதுதான், என் வாழ்நாள் பரிசு" - நடிகர் அமுதவாணன் பூரிப்பு!

நடிகர் அமுதவாணன் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த சிறப்பு நேர்காணல் இதோ...

amuthavaanan
author img

By

Published : Aug 25, 2019, 6:03 PM IST

தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பற்றிக் கூறுங்கள்?

மயூரன் என்ற படத்தில் இப்போது நான் நடித்துக் கொண்டு வருகிறேன். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளேன். கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்படுத்தினால் எந்த மாதிரியான பிரச்னைகள் வருகிறது என்பதை விளக்கும் ஒரு படமாக இருக்கும். வித்தியாசமான படம்.

இயக்குநர் பாலாவால் அறிமுகப்படுத்தப்பட்ட, நீங்கள் அதன்பிறகு அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிக்கவில்லையே ஏன்?

சிறிய வயது முதலே நான் கடுமையாக உழைப்பேன். எப்பொழுதும் என் திறமையை மட்டுமே நம்புவேன். யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்க மாட்டேன். ஊடக துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை நான் கலந்து கொண்ட போட்டிகள் அனைத்திலும் வின்னர் நான்தான். கலக்கப்போவது யார் 3ல் நான், சிவகார்த்திகேயன் உட்பட பலரும் பங்கு பெற்றோம்.

அந்தப் போட்டியில் நான்தான் வின்னர். இதனைத்தொடர்ந்து அது இது எது, ஜோடி நம்பர் 1ல் கலந்து கொண்டேன். காமெடியனாக, நல்ல டான்ஸராக பெஸ்ட் ஃபெர்மார்மன்ஸ் செய்து, சிறந்த என்டர்டெயினருக்கான விருதைப் பெற்றிருக்கிறேன். இதைப் பார்த்த இயக்குநர் பாலா, 'தாரை தப்பட்டை' படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் நடித்ததற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெளிநாட்டு நிகழ்ச்சிகளால் நிறைய பட வாய்ப்புகள் தவறின. இருந்தாலும் நான் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். படங்களிலும் நடித்து வருகிறேன்.

கலந்து கொண்ட எல்லா போட்டிகளிலும் 'டைட்டில் வின்னர்' நீங்கள் சினிமா துறையில் ஒரு இடத்தை பிடிப்பதற்கு ஏன் இத்தனை தடுமாற்றம்?

உண்மையா அது எனக்கும் புரியல. எனக்கான வேலைகளை நான் சரியாக செய்து கொண்டுதான் இருக்கிறேன். என்னை பார்ப்பவர்கள் எல்லாம் நன்றாக நடிக்கிறாய் என்று கூறுவார்கள். ஆனால், ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது. அது எது என்று எனக்கும் தெரியவில்லை.

உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு எது என்று நினைக்கிறீர்கள்?

இயக்குநர் பாலா பாராட்டியது தான், எனக்கு மிகப்பெரிய பாராட்டு. 'தாரை தப்பட்டை' படத்தின் ஷூட்டிங்கின்போது நானும் பாலா சாரும் ஒரே பைக்கில் இரண்டு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தோம். அப்போது என்னிடம் பேசிய இயக்குநர் பாலா, ' உன்னிடம் ஒரு கதை சொன்னால் அதை யதார்த்தமாக நடிக்கிறாய். நீ ஒரு நல்ல நடிகன். சில நேரங்களில் திட்டுவேன். அதை நீ மனதில் வைத்துக் கொள்ளாதே' என்றார். அவ்வளவு பெரிய இயக்குநர் என்னைப் பாராட்டியது, வாழ்வில் கிடைத்த பரிசாக தோன்றியது. அதை நான் மிகப்பெரிய பாராட்டாக நினைக்கிறேன்.

நடிகர் அமுதவாணன் ஈடிவி பாரத் தமிழ்நாட்டிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்!

தற்பொழுது நீங்கள் நடித்துக் கொண்டிருக்கும் அடுத்த படம் குறித்து?

'விடியலை நோக்கி' என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறேன். 'லொள்ளு சபா' மீண்டும் விஜய் டிவியில் வரவுள்ளது. அதில் மெயின் ரோலில் நான் தான் நடிக்கிறேன்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.