பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் ஐஸ்வர்யாவும் ஆராத்யாவும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அமிதாப் பச்சனுக்கு கரோனா நெகட்டிவ் வந்துள்ளது.
இதுகுறித்து நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "உங்களது தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. எனது தந்தை அமிதாப் பச்சனின் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. அவர் இப்போது வீடு திரும்பியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மற்றொரு பதிவில் "எனக்கு எதிர்பாராத விதமாக மீண்டும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. விரைவில் இதிலிருந்து மீண்டு ஆரோக்கியமாக திரும்பி வருவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.