ETV Bharat / sitara

அமலா பாலின் 'ஆடை' போஸ்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும் - டிஜிபியிடம் புகார்

சென்னை: "அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சியை படத்தின் ப்ரோமோஷனுக்கு பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆடை பட போஸ்டர்
author img

By

Published : Jul 18, 2019, 11:37 AM IST

Updated : Jul 18, 2019, 4:03 PM IST

’மேயாத மான்’ திரைப்படத்தை இயக்கிய ரத்னகுமாரின் இயக்கத்தில் அமலா பால் நடித்து நாளை வெளியாக இருக்கும் படம் 'ஆடை' . படத்தின் சர்ச்சைக்குள்ளான காட்சியை வியாபார நோக்கத்திற்காக போஸ்டர்கள், பேனர்களில் பயன்படுத்த தடைவித்தக்க வேண்டும் என்று 'அனைத்து மக்கள் கட்சி' சார்பில் நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Dgp complaint  AADAI ISSUE  AMALAPAUL  AADAI CONTROVERSY  AADAI POSTER  ஆடை சர்ச்சை
ஆடைபடத்தின் போஸ்டர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தலைவர் ராஜேஷ்வரி பிரியா பேசுகையில், "ஆடை படத்தின் வியாபார நோக்கத்திற்காக அமலா பால் நிர்வாணமாக நடித்துள்ள காட்சியை வைத்து போஸ்டர்கள், பேனர்கள் அமைத்து படத்தை ப்ரோமோஷன் செய்கின்றனர். இதனால் சமூகத்தில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வருகின்றனர். இனி அந்தக் காட்சியை போஸ்டர்கள், பேனர்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அமலா பால் வேறு மாநிலத்தில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பற்றி தெரிய வாய்ப்பில்லை" என்றார்.

Intro:Body:ஆடை திரைப்படத்தில் ஆபாசமாக நடித்த காட்சியை படத்தின் வியாபார நோக்கத்திற்காக போஸ்டர்கள்,பேனர்கள் அமைக்க தடைவிதிக்க கோரி அனைத்து மக்கள் கட்சி சார்பாக டிஜிபி அலுவலகத்தில் புகார்..

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கட்சி தலைவி ராஜேஷ்வரி பிரியா

வருகின்ற 19ஆம் தேதி அமலா பால் நடித்து வெளியாகவிருக்கும் ஆடை திரைப்படத்தில் நிர்வாணமாக நடிகை அமலாபால் நடித்துள்ளார். இந்த காட்சியை வைத்து போஸ்டர்கள்,பேனர்கள் அமைத்து படத்தை ப்ரோமோஷன் செய்வதாக குற்றம் சாட்டினார்.

இதனால் பள்ளி மாணவர்கள் மனதில் பாலியல் தூண்டுதல் சம்மந்தமான பிரச்சனை எழ வாய்ப்புள்ளதாகவும் இனி இந்த காட்சியை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என கூறினார்.

மேலும் அமலா பால் வேறு மாநிலத்தில் பிறந்தவர் என்பதால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பற்றி தெரிய வாய்ப்பில்லை எனவும் மேலும் ஆபாசமாக நடித்த காட்சிக்கு அமலாபால் பாஞ்சாலியை சான்றாக வைத்து விழா மேடை ஒன்றில் பேசியுள்ளார்.இதற்கு பாஞ்சாலியை பற்றி பேசுவதற்கு அமலாபாலிற்கு தகுதியில்லை என குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து பாலியல் பிரச்சனை அதிகமாக நடைபெறும் நாடுகளில் இந்தியா இரண்டாம் நாடாக விளங்குவதாகவும் கூறினார்.

மேலும் பெண்களின் பாதுகாப்பு அவசியம் என்பதால் டிஜிபியை சந்தித்து புகார் அளித்து உள்ளதாக தெரிவித்தார். Conclusion:
Last Updated : Jul 18, 2019, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.