ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜூன், திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் தற்போது நடித்துவருகிறார். அந்த படத்திற்கு AA19 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
இதில் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் நடிக்கின்றனர். மேலும் ஜெயராம், தபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், படத்தின் பெயர் ஆகஸ்ட்15 வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.