'நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு, 'தல' அஜித் மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். 'வலிமை' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
'வலிமை' படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முடிந்த நிலையில், சென்னையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 'மங்காத்தா', 'என்னை அறிந்தால்' படங்களுக்குப்பிறகு அஜித், 'வலிமை' படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருவதால், ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது.
அது மட்டுமின்றி படத்தில் கார் ரேஸ், பைக் ரேஸ் போன்ற காட்சிகள் உள்ளன என்று படக்குழு வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்தன. இந்த நிலையில் 'வலிமை' படக்குழு கார் ரேஸ், பைக் ரேஸ் உள்ளிட்ட காட்சிகளை படமாக்குவதற்காக ஏப்ரல் மாதம் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல முடிவு செய்துள்ளனர்.
அஜித், பைக் ரேஸ், கார் ரேஸ் காட்சிகளுக்கு டூப் போடாமல் தானே நடிப்பார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதே போன்று, அவரது வேகம் எப்படி இருக்கும் என்றும் ரசிகர்களுக்குத் தெரியும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் ரேஸைப் பார்க்க தல ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் பங்குகேற்கும் மேன் vs வைல்ட் நிகழ்ச்சி - சில சுவாரஸ்ய தகவல்கள்