ETV Bharat / sitara

ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் நடிகர் அஜித்தின் தக்ஷா குழு! - Ajith daksha team testing drone for spraying Organic Disinfectant

சென்னையில் சிவப்பு மண்டல பகுதிகளில் நடிகர் அஜித் வழிநடத்தும் தஷா குழுவானது ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனையை வெற்றிகரமாக செய்துள்ளது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Ajith daksha team testing drone for spraying Disinfectant

author img

By

Published : Jun 25, 2020, 3:29 PM IST

கரோனா தொற்றின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக சென்னை மாநகரம் இந்தத் தொற்றினால் பெரிதும் சேதாரம் அடைந்துள்ளது. இதையடுத்து, பல திரை பிரபலங்களும் தங்களால் ஆன உதவிகளை கரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு செய்துவருகின்றனர். இந்நிலையில் தொற்றின் தீவிரம் அறிந்த தக்ஷா குழு, ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சோதனையில் ஈடுபட்டுவருகிறது.

இந்த தக்ஷா குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக உள்ளார். தக்ஷா குழுவானது ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற World Unmanned Aerial Vehicle Medical Express Challenge போட்டியில் வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பிடித்தது. இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக இருந்து வழிநடத்திவருகிறார்.

தற்போது இந்தக் குழுவானது ஆளில்லா விமானம் மூலமாக சென்னையில் சிவப்பு மண்டல பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. நடிகர் அஜித் சத்தமில்லாமல் இதுபோன்ற தொற்று காலத்தில் மக்களுக்கு உதவிவருவதை பலரும் பாராட்டிவருகின்றனர்.

இதையும் படிங்க... அஜித்தின் 'வலிமை' படத்தில் இப்படி ஒரு சேஸிங்கா..!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.