ETV Bharat / sitara

’பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்! - ஐஸ்வர்யா ராய்

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் மீண்டும் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டுள்ளார்.

Aishwarya Rai joins in Ponniyin Selvan shoot

author img

By

Published : Jul 21, 2021, 5:22 PM IST

மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’, கரோனா தளர்வுகளுக்கு பிறகு புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கார்த்தி உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நிலையில், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லெட்சுமி ஆகியோர் தற்போது ஷூட்டிங்கில் இணைந்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராய் இதில் நந்தினி, மந்தாகினி தேவி ஆகிய இரு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஐஸ்வர்ய லெட்சுமிக்கு பூங்குழலி எனும் துணிவான பெண்ணின் கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரிக்கு அடுத்ததாக மத்திய பிரதேசம் அல்லது ஹைதரபாத்தில் இதன் படப்பிடிப்பு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, நயன்தாரா, திரிஷா என இதில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். தற்போது 80% படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அடேங்கப்பா! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.