துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் "ஆதித்யா வர்மா" படமானது, தெலுங்கில் "விஜய் தேவரகொண்டா" நடிப்பில் வெளியாகிய 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமெக் ஆகும்.
இந்தப்படத்தை இயக்குநர் கிரீசயா இயக்கியுள்ள நிலையில், ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவுப் பணியை கையாண்டிருக்கிறார். 'E4 எண்டெர்டெய்ன்மென்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரதன் இசையமைத்திருக்கிறார்.
இதனிடையே இப்படத்தில் வரும்"எதற்கடி வலி தந்தாய்" என்ற பாடலை, ஹீரோ துருவ் விக்ரம் பாடி அசத்தியுள்ளார்.
தற்போது இந்த லிரிக்கல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் இப்பாடல் மிகவும் ரொமான்டிக்காக இருப்பதால், காதலர்களை மிகவும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.