பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக யாஷ் ராஜ் பிலிம்ஸ் (ஒய்ஆர்எஃப்) நிறுவனம் இருந்துவருகிறது. இந்த நிறுவனம் பல சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களைக் கொடுத்துள்ளது.
இந்த நிறுவனமானது மறைந்த திரைப்படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா என்பவரால் தொடங்கப்பட்டது. தற்போது இந்த நிறுவனத்தை அவரது மகனான ஆதித்யா சோப்ரா நிர்வாக இயக்குநராக நிர்வகித்து வருகிறார்.
யாஷ் சோப்ராவின் 88ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நிறுவனம், 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை இந்த நிறுவனம் கோலாகலமாக கொண்டாடும் விதமாக நிறுவனத்தின் புதிய கோல்டன் லோகோவை ஆதித்யா சோப்ரா வெளியிட்டுள்ளார்.
"பி.ஆர் பிலிம்ஸின் சம்பள ஊழியராக இருந்த தந்தை யாஷ் சோப்ரா, சகோதரர் திரு பி.ஆர். சோப்ரா அதை விட்டுவிட்டு 1970ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை தொடங்கினர். அப்போது அவர்களுக்கு சொந்தமாக ஒன்றுகூட இல்லை.
ஒரு தொழிலை எவ்வாறு நடத்துவது, ஒரு நிறுவனத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தான அடிப்படை அறிவுகூட எனது தந்தைக்கு கிடையாது. அவரிடம் இருந்ததெல்லாம் அவரது திறமை, கடின உழைப்பு ஆகியவற்றில் வலுவான நம்பிக்கை, தன்னம்பிக்கை கொண்ட ஒரு கனவு.
அந்த தன்னம்பிக்கையே அவர் ஒரு வலுவான படைப்பாளி மனிதனாகவும், யாஷ் ராஜ் பிலிம்ஸ் உருவாக உறுதுணையாகவும் இருந்தது. இந்த சிறப்பு சின்னம் இந்திய சினிமாவில் எங்களுக்கு மைல் கல்கள் வழங்கிய கலைஞர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். இந்த 50 ஆண்டு காலமாக எங்கள் மீது நம்பிக்கை கொண்டு அன்பும் ஆதரவும் தெரிவிக்கும் உங்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்" என்று ஆதித்யா சோப்ரா கூறியுள்ளார்.
யாஷ் ராஜ் பிலிம்ஸ் புதிய லோகோ வெளியீடு! - யாஷ் ராஜ் பிலிம்ஸின் புதிய லோகோ
மும்பை: யாஷ் ராஜ் பிலிம்ஸ் 50ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் புதிய கோல்டன் லோகோவை வெளியிட்டுள்ளது.