மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டவர் அதிதி ராவ் ஹைதரி. இதன் பின்னர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' படத்தில் தோன்றினார். சமீபத்தில் உதயநிதி நடிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படத்திலும் நடித்திருந்தார்.
அதிதி ராவ் கைவசமாக துக்ளக் தர்பார், ஹே சினாமிகா (Hey Sinamika), பொன்னியின் செல்லவன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி, யோகா என உடல் பிட்னெஸ்ஸூக்காக பயிற்சிகளை செய்துவருகின்றனர். அவ்வாறு செய்யும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தங்களது சமூகவலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டும் வருகின்றனர். இவர்களிடம் இருந்து வித்தயாசமாக அதிதி ராவ் வீட்டிலேயே களரி பயின்றுள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
வேகமாக வந்து கால்களை தூக்கி தனது கைகளை தொட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. களரி பயிற்சியை அதிதி ஆர்வத்தில் காற்றாரா அல்லது பொன்னியின் செல்வன் படத்திற்காக கற்றாரா என நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.