ETV Bharat / sitara

சந்திரமுகி 2ஆம் பாகத்தில் கமிட்டான நடிகை தபு

சந்திரமுகி 2ஆம் பாகத்தின் ரீமேக்காக உருவாகி வரும் ' பூல் புலையா 2' படத்தில் தபு இணைந்துள்ளார்.

Actress tabu join hands with bhool bhulaiyaa 2 team
author img

By

Published : Nov 15, 2019, 5:57 PM IST

மலையாளத்தில் 'மணிசித்திரத்தாலு', கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம், தமிழில் ரஜினி நடித்து 'சந்திரமுகி' என்ற பெயரில் வெளியாகி மாஸ் ஹிட்டானது. தமிழைத் தொடர்ந்து பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், வித்யா பாலன் நடிப்பில் 'பூல் புலையா' என்ற பெயரில் இத்திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தை மலையாள இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியிருந்தார். மற்ற மொழிகளைப் போலவே பாலிவுட்டிலும் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இதைத்தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகமான 'பூல் புலையா 2' உருவாகவிருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அனீல் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக இதன் தயாரிப்பு நிறுவனம் டீ-சீரிஸ் அறிவித்திருந்தது.

2020 ஜூலை மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை தபு தற்போது இணைந்துள்ளார் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியானது 'தபாங்-3'யின் ரொமான்ஸ் பாடல்

Intro:Body:

thabu in chandramuki 2

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.