மலையாள நடிகையாய் இருந்தும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை நஸ்ரியா.
இவர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'நேரம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 'ராஜா ராணி', 'வாயை மூடி பேசவும்', 'நய்யாண்டி', 'திருமணம் எனும் நிக்காஹ்' போன்ற திரைப்படங்களில் நடித்தார். பிறகு ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்துவருகிறார்.
தற்போது நஸ்ரியாவும், அவரது தோழியும், நடிகர் துல்கர் சல்மானின் மனைவியுமான அமல் சுஃபியாவும் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: சமூக வலைதளங்களை விட்டு விலகுகிறார் இயக்குநர் சுசீந்திரன் - இதான் காரணமாம்