தமிழில், 'அட்டகத்தி' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. இப்படத்திற்கு பின் விஜய் சேதுபதியுடன் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', சிவகார்த்திகேயனுடன் 'எதிர்நீச்சல்' உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இவர் தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நந்திதாவின் தந்தை சிவசாமி (54) உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நந்திதா தனது ட்விட்டர் பக்கத்தில், எனது தந்தை சிவசாமி இறந்துவிட்டார் என்பதை என் நலம்விரும்பிகளுக்கு தெரிவிக்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இவரின் இந்த பதிவையடுத்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் சீனு ராமசாமி உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் சமூகவலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரபுதேவாவுடன் நடனமாட பயமாக இருந்தது: நந்திதா