சீனாவில் இருந்து பரவி வந்த கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று நோய் பரவாமல் இருக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும் திரை பிரபலங்களும் இந்தக் கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், விழிப்புணர்வுகளையும் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் பிரபலங்கள் பலரும் கரோனா நோயால் ஏற்பட்ட இழப்புகளை சமாளிக்க நிதியுதவி வழங்குகின்றனர். அந்த வகையில் மகாராஷ்டிரா முதலமைச்சருக்கும், பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கும் நடிகை கத்ரீனா கைஃப் நிதியுதவி கொடுத்துள்ளார்.
முன்னதாக பாலிவுட் பிரபலங்களான சாரா அலி கான், வருண் தவான், அக்ஷ்ய் குமார், அனுஷ்கா சர்மா, கார்த்திக் ஆர்யன் ஆகியோரும் நிதியுதவி கொடுத்தனர்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தேசிய நிவாரண நிதிக்கு ரூ.25 கோடியை வழங்கிய அக்ஷய் குமார்!