கரோனா வைரஸ் குறித்து அவ்வப்போது திரையுலக பிரலங்கள், அரசியல் பிரமுகர்கள் தமது சமூக வலைத்தளபக்கங்களில் பதிவு வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “ஊரடங்கும் உயிருக்கு பயந்து - பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல, எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் பதிவை கலாய்த்து நடிகர் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இது லெட்டர் சீ மடல் இல்லை கடுதாசின்னு வச்சுப்போமா? வேண்டாம் கடிதமே இருக்கட்டும் . இலக்கணப்படி இந்த கவிதை எந்த வகை?” என்று குறிப்பிட்டுள்ளார்.இப்பதிவை கண்டு கடுப்பான கமல் ரசிகர்கள், வழக்கம் போல் கஸ்தூரிக்கு எதிராக மீம்ஸ் உருவாக்கி அவரைக் கலாய்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அறிக்கை விட்டு அழிக்க முடியுமா... கரோனா அரக்கனை - காட்டமான கஸ்தூரி