தமிழ்நாட்டில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் கரோனா தீநுண்மியால் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று உள்ளவர்களின் பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஸ்டிக்கர் ஓட்டி தனிமைப்படுத்திவருகின்றனர். அந்த வரிசையில் தற்போது பிந்து மாதவியின் அடுக்குமாடிக் குடியிருப்பும் சிக்கியுள்ளது.
பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் குடியிருப்பு வாசலை மாநகராட்சி நிர்வாகிகள் சீல்வைத்துள்ளனர்.
இச்செய்தியை உறுதிசெய்யும் வகையில் நடிகை பிந்து மாதவி தனது ட்விட்டர் பக்கத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒருவருக்கு கரோனா இருப்பது தெரியவந்தது.
அதனால் அடுத்த 14 நாள்களுக்கு நாங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.