தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று பல மொழிகளில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் நடிகை சுமலதா. இவர், நடிகர் ரஜினி, மம்மூட்டி, கமல் ஹாசன் உள்ளிட்ட உச்ச நச்சத்திரங்களுடன் நடித்து புகழ்பெற்றவர். இவரது கணவர் நடிகர் அம்பரீஷ் காங்கிரசில் இணைந்து அமைச்சராகவும் எம்பியாகவும் இருந்தவர். இவர் 2018இல் மாரடைப்பால் இறந்தார்.
இதையடுத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தனது கணவர் வெற்றிபெற்ற தொகுதியான மாண்டியாவில் போட்டியிட நடிகை சுமலதா வாய்ப்பு கேட்டார். ஆனால், அதற்கு காங்கிரஸ் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு போட்டியிட கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமிக்கு சீட் வழங்கியது காங்கிரஸ். இதன் காரணமாக, அங்கு சுயேச்சையாகக் களமிறங்க முடிவுசெய்தார். இவருக்கு பாஜகவிடமிருந்து ஆதரவு கிடைத்தது.
மாண்டியா தொகுதியில் அமோக வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார். அன்றுமுதல், அரசியல் களத்தில் முக்கியப் புள்ளியாக வலம்வருகிறார். பலவிதமான போராட்டங்களை நடத்திவருகிறார். இந்தி திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.
கரோனா காலகட்டத்தில் தனது தொகுதி மக்களை அவ்வப்போது சந்தித்துப் பார்வையிட்டுவந்த அவர், கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி மீண்டுவந்து தனது மக்கள் பணியைத் தொடர்ந்து செய்துவருகிறார்.
இதையும் படிங்க: தெலுங்கு பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் - 'ரிபப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக்