நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றது.
இதனையடுத்து, விக்ரம் 'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய த்ரிலர் படம் இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார். இப்படம் விக்ரமுக்கு 58ஆவது படமாகும். தற்காலிகமாக இப்படத்திற்கு '#விக்ரம் 58' என்று பெயர் வைத்துள்ளனர்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ - வியாகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இதில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பாவனி சங்கர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.
#விக்ரம் 58 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் விக்ரம் பத்துக்கும் மேற்பட்ட கெட் அப்களில் வருவதால் அவரது மேக்-அப்பில் தனிக்கவனம் செலுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை ஏப்ரல் 2020இல் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
விரைவில் படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.