நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான 'சூரரைப்போற்று' , 'ஜெய்பீம்' ஆகிய இரண்டு படங்களும் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இரண்டு ஹிட் படங்களும் ஓடிடியில் வெளியானதால் சூர்யா ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். அதனைப் போக்கும்வகையில் சூர்யாவின் அடுத்த படமான 'எதற்கும் துணிந்தவன்' திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒரேநேரத்தில் உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
-
#ET coming to you in 5 languages 🔥
— Sun Pictures (@sunpictures) December 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Get ready anbana fans!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO @thangadurai123 #EtharkkumThunindhavan #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/sikc7aa4yG
">#ET coming to you in 5 languages 🔥
— Sun Pictures (@sunpictures) December 13, 2021
Get ready anbana fans!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO @thangadurai123 #EtharkkumThunindhavan #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/sikc7aa4yG#ET coming to you in 5 languages 🔥
— Sun Pictures (@sunpictures) December 13, 2021
Get ready anbana fans!@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan #Vinay @sooriofficial @AntonyLRuben @VijaytvpugazhO @thangadurai123 #EtharkkumThunindhavan #ఈటి #ಈಟಿ #ഇറ്റി #ईटी pic.twitter.com/sikc7aa4yG
தொடர்ந்து சூர்யாவின் படங்கள் ஓடிடியில் வெளியானதால் சோகத்திலிருந்த ரசிகர்களுக்கு இந்தச் செய்தி ட்ரீட் வைத்ததுபோல் அமைந்துள்ளது.
பாண்டிராஜ் இயக்கிவரும் இப்படம் கிராமத்துப் பின்னணி சென்டிமென்டில் தயாராகியுள்ளதால், 'வேல்' படத்தில் தோன்றிய சூர்யாவைப் படத்தில் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நடிகர் அர்ஜுன்