ETV Bharat / sitara

சூர்யாவின் நன்கொடை பணம் 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்கப்படும் - நடிகர் சங்கம் - 2000 உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சூர்யாவின் நன்கொடை

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடக கலைஞர்கள், மூத்த நடிகர்கள் என வேலையின்றியும், வருமானமின்றியும் பெரிதும் அவதிபட்டு வரும் இரண்டாயிரம் உறுப்பினர்களுக்கு நடிகர் சூர்யா வழங்கிய நன்கொடை 20 லட்சம் ரூபாய் பிரித்து வழங்கப்படவுள்ளது.

Actor Suriya donation to be given for 2000 members in actors association
சூர்யாவின் நன்கொடை 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு பிரித்து வழங்கப்படுவதாக அறிவிப்பு
author img

By

Published : Aug 31, 2020, 7:08 PM IST

சென்னை: நடிகர் சூர்யா வழங்கிய 20 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்தின் 2 ஆயிரம் உறுப்பினர்களுக்கு விரைவில் பகிர்ந்து அளிக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சூர்யா நடித்துள்ள ’சூரரைப் போற்று' படத்தின் வெளியீட்டுத் தொகையிலிருந்து முதற்கட்டமாக ரூ.1.5 கோடி திரைப்படத்துறை சார்ந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது. இதனை நடிகர் சூர்யாவின் தந்தை சிவக்குமார் வழங்கினார். இந்தத் தொகை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சமமேளன சங்கம், இயக்குநர் சங்கம், நடிகர் சங்கம் என பிரித்து வழங்கப்பட்டது.

அந்த வகையில், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட 20 லட்சம் ரூபாயை, உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நடிகர் சூர்யா மற்றும் சிவக்குமார் ஆகியோர் தென்னிந்திய நடிகர்கள் சங்க சாரிட்டபிள் டிரஸ்டுக்கு ரூ.20 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதற்கு சங்கத்தின் சார்பில் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடக கலைஞர்கள், மூத்த நடிகர்கள் என பலரும் வேலையின்றியும், வருமானமின்றியும் பெரிதும் அவதிபட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த நன்கொடை தொகையை தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள இரண்டாயிரம் பேருக்கு சரிசமமாக பிரித்து விரைவில் வழங்கபட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பறவைகளே பத்திரம்! கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.