கரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், அரசுக்கு உதவ முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்விடுத்திருந்தார். அதற்கு முத்தாய்ப்பாக முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் உதவிசெய்துள்ளார்.
அதன்படி, அவர் தமிழ்நாடு முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கி தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். ஏற்கனவே இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஃபெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இந்த பொதுநலச் செயல் மற்ற நடிகர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் புளகாங்கிதம் அடைகின்றனர். இதையடுத்து, நடிகர், நடிகைகள் தங்களாலான பங்களிப்பு கரோனா தடுப்புக்காக ஆற்றுவார்கள் என்று கோலிவுட் ரசிகர் வட்டாரங்கள் நம்புகின்றன.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் - நிதியுதவி வழங்கிய கத்ரீனா கைஃப்