ETV Bharat / sitara

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே - மகா நடிகன் சத்யராஜ்

தமிழ் சினிமாவில் வில்லன், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட மகா நடிகன் சத்யராஜ் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார்.

sathyaraj birthday, நடிகர் சத்யராஜ், சத்யராஜ் பிறந்தநாள், actor sathyaraj 67th birthday, actor birthday special, ஒன்பது ரூபாய் நோட்டு, அமைதிப்படை, கட்டப்பா
actor sathyaraj 67th birthday special
author img

By

Published : Oct 3, 2021, 7:16 AM IST

Updated : Oct 3, 2021, 7:53 AM IST

சினிமாவில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்திலாவது நடிக்க வேண்டும் என்பது தான் இன்றைக்கும் பலரின் கனவாக உள்ளது. அப்படிபட்ட ஆசை தான் கோவை மாவட்டத்தில் பிறந்த சத்யராஜூக்கும் தோன்றியது. எம்.ஜி.ஆரை பார்த்து நடிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு தமிழ் சினிமாவில் 1978ஆம் ஆண்டு ’சட்டம் என் கையில்’ திரைப்படத்தில் தேங்காய் சீனிவாசனுக்கு அடியால் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

எப்படியாவது திரைத்துறையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அறிமுகமான முதல் படத்திலேயே தனது வித்தியாசமான நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தார். அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் அடியால் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சத்யராஜ், அடுத்ததாக 1984ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ’நூறாவது நாள்’ படத்தில் வில்லனாக அவதாரமெடுத்தார்.

மொட்டை தலை, கருப்பு கண்ணாடி என்று முழு வில்லனாக அப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் குறிப்பாக, அப்படத்தில் நளினியை கொலை செய்யும் போது ரத்தவெறி அவரது முகத்தில் காண்பித்து, இவர்தான் அடுத்த சில ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத வில்லன் என்று மக்களை சொல்ல வைத்தார்.

ஆனால் எம்.ஜி.ஆர் போன்று தான் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற ஆசை இவரை துரத்தவே, தனது கனவை நோக்கி ஓட ஆரம்பித்தார். சத்யராஜின் நடிப்பை பார்த்து வியந்த பாரதிராஜா அவருக்கு 1986ஆம் ஆண்டு தனது ’கடலோர கவிதைகள்’ படம் மூலம் ஹீராவாக அறிமுகப்படுத்தினார். அத்தனை ஆண்டுகளாக வில்லனாக பார்த்த சத்யராஜை அந்த படத்தில் மக்கள் மிகவும் சாதுவான கதா பாத்திரத்தில் மக்கள் வெகுவாக ரசித்து பார்த்தனர்.

தொடர்ந்து ’சின்னதம்பி பெரியதம்பி’, 'என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ என்று ஹீராவாக தனது நடிப்பு திறைமையை வெளிக்காட்டி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார் சத்யராஜ்.

ஒன்பது ரூபாய் நோட்டு
ஒன்பது ரூபாய் நோட்டு

”மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்” என்று இந்த பாடல் வரியே படத்தின் கதையை சொல்லும். ’ஒன்பது ரூபாய் நோட்டு' படத்தின் தலைப்பிலேயே தெரிந்துவிடும் சத்யராஜ் இந்தப் படத்தில் செல்லக்காசு என்று. அப்பாவியான முகம் கொண்ட விவசாயி கதா பாத்திரத்தில் படம் முழுவதும் தோன்றி அவர் வெளிப்படுத்திய அசுரத்தனமான நடிப்பு, அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது.

நடிகன்
நடிகன்

இளமையான நடிகராக குஷ்புவிற்கு ஜோடியாக, வயதான கதா பாத்திரத்தில் மனோரமாவிற்கு ஜோடியாகவும் அப்படத்தில் வலம் வந்திருப்பார். அதிலும் குறிப்பாக சத்யராஜ்-கவுண்டமணி காம்போவில் வரும் நகைச்சுவை இன்றும் ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

அமைதிப்படை
அமைதிப்படை

தமிழ் சினிமாவில் எத்தனை அரசியல் திரைப்படங்கள் வந்தாலும், அந்த வரிசையில் ’அமைதிப்படை' என்றுமே முதல் இடத்தில் தான் இருக்கும். பிச்சை எடுப்பவன், அரண்மனையில் பெண் எடுப்பதும், அரியணையில் ஏறும் அரசியலை தெளிவாக உடைத்து எறிந்த அமாவாசை, நாகராஜ சோழனாக உருவெடுப்பது என்பது இவரால் மட்டுமே சாத்தியம். அரசியலை பகடி செய்து தற்போதைய காலகட்டத்தில் வெளியாகும் படங்களுக்கு எல்லாம் முன்னோடி அமைதிப்படை திரைப்படம் தான்.

பெரியார்

பெரியார் மீது பற்றுள்ள இவர், என்றுமே கடவுள் எதிர்ப்பு பற்றி பேசியது இல்லை. காரணம், பெரியார் குறித்து சிறந்த புரிதல் உள்ளவர் சத்யராஜ். அதன் அடிப்படையிலேயே ’பெரியார்’ படத்தில் தந்தை பெரியாராகவே வாழ்ந்திருப்பார்.

சத்யராஜின் ஆல் டைம் ஃபேவரைட் வசனங்கள்:

*என்னமா கண்ணு சௌக்கியமா
*என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே
*தகடு தகடு, என்று இவர் பேசிய வசனம் இன்றும் மக்களின் ஆல் டைம் ஃபேவரைட் வசனங்களில் ஒன்றாக உள்ளது.

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களுடன் வலம் வரும் இவரின் நடிப்பு பயணமானது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வில்லன், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமை கொண்ட மகா நடிகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

Last Updated : Oct 3, 2021, 7:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.