ETV Bharat / sitara

நடிகர் சரத்குமாருக்கு கரோனா தொற்று - சரத்குமாருக்கு கோவிட் தொற்று

திரைப்பட நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சரத்குமாருக்கு கரோனா..!
நடிகர் சரத்குமாருக்கு கரோனா..!
author img

By

Published : Feb 2, 2022, 7:36 AM IST

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடம் பதித்த நடிகர் சரத்குமார், 67 வயதிலும், கடுமையான உடற்பயிற்சி, சீரான உணவுப் பழக்கவழக்கங்களால் தன் உடலை இளமையாகப் பராமரித்துவருகிறார்.

இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 1) தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் சரத்குமார் தெரிவித்தார்.

சரத்குமாரின் ட்வீட்
சரத்குமாரின் ட்வீட்

அதில், ”என் நண்பர்கள், உறவினர்கள், என் கட்சி உறவுகளுக்கு மாலை வணக்கம். இன்று மாலை எனக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் கடந்த வாரம் வரை தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இவர், விஜய் ஆண்டனி நடிப்பில், விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ அறிமுக இயக்குநர் திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் சமரான் மற்றும் சில படங்களில் நடித்துவருகிறார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் சூடுபிடித்திருக்கும் வேலையில், இவரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: ரஜினியின் மூத்த மகளுக்கு கரோனா தொற்று உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.