கரோனா வைரஸ் தொற்று காரணமாக, வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் சந்தானம் சத்தமில்லாமல் தனது ரசிகர் மன்றம் மூலம் பொதுமக்கள், காவல்துறை, மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்குத் தேவையான பொருள்கள் வழங்கியுள்ளார்.
![ரசிகர் மன்றம் மூலம் உதவி செய்த சந்தானம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6765241_196_6765241_1586699476314.png)
அதிலும், குறிப்பாக பொது மக்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான பால், காய்கறிகள்,அரிசி, மளிகைப்பொருள்கள், கபசுரக் குடிநீர், கிருமிநாசினி, முகக்கவசம் ஆகியவற்றை வழங்கியுள்ளனர். சத்தமில்லாமல் கரோனா நிவாரணப் பணிகளுக்குத் தன்னால் முடிந்தவரை சந்தானம் உதவி செய்துவருவதை அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.