பாசிட்டிவ் பிரின்ட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் நடிகர் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் ஆகியோரை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். மேலும் இவர்களுடன் எம்.எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் கூறுகையில், "படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்.

இதுவரை தமிழ் சினிமா கண்டிராத லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வாகமன், சீனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். ரசிகர்களை ஈர்க்கும் பல அம்சங்களை இப்படம் கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. விரைவில் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம்" என்றார்.
