இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் 24 டன் எடையுள்ள நிவாரண பொருள்களை இரண்டு லாரிகளில் இயக்குநர் சங்கத்திற்கு அனுப்பி வைத்தார்.
ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி, மளிகை பொருள்கள் அடங்கிய இரண்டு பைகள் வழங்கப்பட உள்ளன. ஊரடங்கின் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மனதில் வைத்து அரிசி மூட்டைகள், மளிகைப் பொருள்களை அனுப்பிவைத்த நடிகர் ரஜினிகாந்துக்கு இயக்குநர் சங்கம் நன்றிகளை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க... ஃபெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கிய ரஜினிகாந்த்!