ETV Bharat / sitara

கணியன் பூங்குன்றன் - மனோ பேக் இன் ஆக்ஷன் 'துப்பறிவாளன் 2' அப்டேட்

'துப்பறிவாளன் 2' படத்தில் நடிகர் விஷால் - பிரசன்னா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Nov 28, 2019, 4:35 PM IST

vishal
vishal

தனது செல்லநாய் இறந்ததன் மர்மத்தை கண்டுபிடிக்குமாறு துப்பறிவாளனான தன்னை நாடிய சிறுவனுக்கு உதவ முற்படும் கணியன் பூங்குன்றன், அதன் பின்னணியில் இருக்கும் கேங்கும், அவர்களின் பித்தலாட்டங்களும் என விரியும் விதமாக அமைந்திருந்த துப்பறிவாளன் படம் ரசிகர்களுக்கு சிறந்த சீட் எட்ஜ் த்ரில்லராக புதிய அனுபவத்தை தந்தது. இந்தப் படம் ஹாலிவுட் சூப்பர் ஹிட் படமான ஷேர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திர பாணியில் அமைந்திருப்பதாகக் கூறி நன்றி கார்டு படத்தின் தொடக்கத்தில் போடப்பட்டது.

2017ஆம் ஆண்டு சஸ்பென்ஸ் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை 'துப்பறிவாளன்' திரைப்படம் பெற்றிருந்தது. படத்தில் கணியன் பூங்குன்றன் என்ற கேரக்டரில் டிடெக்டிவாக நடித்திருப்பார் நடிகர் விஷால். படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்த நிலையில், மிஷ்கின் இயக்கியிருந்தார்.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. துப்பறிவாளன் 2' என்ற பெயரில் உருவாகும் இரண்டாம் பாகத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் லண்டனில் மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது நடிகர் பிரசன்னா விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் அதில், கணியன் பூங்குன்றன் - மனோ பேக் இன் ஆக்ஷன், ஆனால் இம்முறை வேட்டை லண்டனில் என்று குறிப்பிட்டுள்ளார்.

Intro:Body:

https://twitter.com/Prasanna_actor/status/1199970840198160385

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.