ஐந்து வருட கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம் 'பாகுபலி' என்ற இமாலய வெற்றிப் படத்தை கொடுத்தவர் பிரபாஸ். இதையடுத்து அங்கேயே நின்று விடாமல், தொடர்ந்து 'சாஹோ' என்ற மற்றொரு பிரமாண்ட படத்தை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். இதனால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் அவரை ஆதர்ச நாயகனாக ஏற்றுக்கொண்டனர். மேலும் வாழ்க்கை மற்றும் தொழிலை பற்றி தெரிந்துகொள்ள தங்களிடம் நெருக்கமாக இணைந்திருக்க வேண்டும் என்பதால் இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கும்படி அவரது ரசிகர்கள் வலியுறுத்திவந்தனர்.
ஆனால் பல நாட்களாக எந்தவித பதிலும் அளிக்காமல் மவுனம் காத்துவந்தனர். இந்நிலையில் நீண்ட நாட்களாக் ரசிகர்கள் கேட்டுக் கொண்ட கோரிக்கையை ஏற்று பிரபாஸ் இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.