ETV Bharat / sitara

#6YearsOfPremam: 'நம்பமுடியவில்லை...'பிரேமம்' ஜார்ஜ் பதிவிட்ட ட்வீட்! - ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பிரேமம்

நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் #6YearsOfPremam என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடடி வருகின்றனர்.

premam
premam
author img

By

Published : May 29, 2021, 5:08 PM IST

மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான 'பிரேமம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படமானது மலையாள ரசிகர்களை மட்டும் கவராமல் தமிழ், தெலுங்கு, கன்னட ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

'பிரமேம்' படம் ஆரம்பம் முதல் க்ளைமேக்ஸ் வரை காட்சிகள் முழுவதும் காதல் மழை பெய்து கொண்டே இருக்கும். பள்ளிப் பருவ பையானாக வரும் ஜார்ஜ் (நிவின் பாலி), மேரி (அனுபமா பரமேஸ்வரன்) பின்னால் சுற்றுவது, கல்லூரி பருவ காலத்தில் தெனாவட்டுடனும் நண்பர்களுடன் லூட்டி அடித்து சுற்றும் ஜார்ஜ், மலர் (சாய் பல்லவி) டீச்சரை பார்த்து காதல் வயப்படுவது, இறுதியாக வாழ்க்கையின் எதார்தத்தை புரிந்து கொண்டு பேக்கரி கடை உரிமையாளரான ஜார்ஜ், செலினை (மடோனா செபாஸ்டியன்) திருமணம் செய்து கொள்ளவது என நிவின் பாலி படம் முழுவதும் மாற்றங்களைக் கொடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிவின் பாலி மலையாள சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கினார். இளைஞர்களின் மனதை புரிந்துக்கொண்ட அல்போன்ஸ் புத்திரனின் கதையை உள்ளவாங்கி திரையில் பிரதிபலித்த நிவின் பாலி, அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் என பிரமேம் பட்டாளங்கள் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்தனர்.

இந்நிலையில், இந்தப்படம் இன்றுடன் (மே 29) வெளியாகிய ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை ரசிகர்கள் சமூகவலைதளங்களில் #6YearsOfPremam என்ற ஹேஷ் டேக்குகளை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். நிவின் பாலியும் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரேமம் வெளியாகி 6ஆண்டுகள் ஆகிவிட்டது என நம்பமுடியவில்லை. அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.