சென்னை: கமல் ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் கைதி பட பிரபலம் நரேன் இணைந்துள்ளார்.
நடிகர் கமல் ஹாசனின் 232ஆவது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். 'விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதில் மலையாள நடிகர் பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், 'விக்ரம்' படத்தில் நடிகர் நரேன் இணைந்துள்ளார்.
இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ''விக்ரம் பட டீசர் வெளியானபோது, வாழ்த்துச் சொல்ல லோகேஷுக்கு தொலைபேசியில் அழைத்தேன். அப்போது அவர் எனக்கு இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரம் இருக்கிறது எனக் கூறினார்'' எனத் தெரிவித்தார்.
நடிகர் நரேன் ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: இசையமைக்கும் பணியை தொடங்கிய தமன்