நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து நடிக்க உள்ளனர். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இந்நிலையில் இப்படம் குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "முதல்முறையாக அண்ணியுடன் இணைந்து நடிப்பது த்ரில்லாக உள்ளது. இயக்குநர் ஜீத்து ஜோசப்புடன் பணிபுரிவதில் மகிழ்ச்சி. சத்யராஜ் இப்படத்தில் இணைந்திருப்பது கூடுதல் பலம். நேற்று படப்பிடிப்பு தொடங்கியது" என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த படத்தின் போஸ்டரை படக்குழுவினர் நேற்று வெளியிட்டனர். அந்த போஸ்டரில் இப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.