ETV Bharat / sitara

ஐந்து மொழிகளில் 'பாம்பாட்டம்' ஆட வரும் 'நான் அவனில்லை' ஜீவன் - பாம்பாட்டம் படத்தின் கதாநாயகனாக நடிக்கும் ஜீவன்

தென்னிந்திய சினிமா, இந்தி சினிமா நடிகர்கள் இணைந்து நடிக்க கதைக்கு முக்கியத்துவம் அளித்து ஹாரர் திரில்லர் படமாக உருவாகவுள்ளது 'பாம்பாட்டம்'.

Horror thriller movie Pambattam
Actor Jeevan new movie
author img

By

Published : Jan 4, 2020, 12:29 PM IST

சென்னை: ஹாரர் கலந்த திரில்லர் பாணியில் ஐந்து மொழிகளில் உருவாகிறது 'பாம்பாட்டம்' திரைப்படம்.

6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப்படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் 'பாம்பாட்டம்'. இந்தப் படத்தில் காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரமாண்டமான பொருட்செலவில் பாம்பாட்டம் படத்தை இயக்குகிறார்.

Actor Jeevan new movie
Horror thriller movie Pambattam

படம் குறித்து இயக்குநர் வடிவுடையான் கூறுகையில்,

’நடிகர் ஜீவன் நடிக்கும் முதல் ஹாரர் திரில்லர் படம் 'பாம்பாட்டம்'. படத்தின் கதையை கேட்டவுடனே நடிப்பதற்கு ஒப்புக்கொண்டார்.

இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்தப் படத்தில் பார்க்கலாம். அந்த அளவுக்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாராகிறது. இந்த ஐந்து மொழிகளிலிருந்தும் முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.

முன்னணி கிராபிக்ஸ் நிறுவனம் படத்துக்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் தொடங்கவுள்ளது.

சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது’ என்றார்.

Intro:நடிகர் ஜீவன் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகும் படம் பாம்பாட்டம். Body:6.2, ஓரம்போ, வாத்தியார் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் நிறுவனம் தனது படைப்பை மிக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கும் படம் பாம்பாட்டம். இந்த படத்தில் காக்க காக்க, திருட்டுப்பயலே, நான் அவனில்லை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஜீவன் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

தொடர்ந்து ஹாரர் படங்களை இயக்கி வரும் வி.சி வடிவுடையான் தற்போது ஹாரர் கலந்த திரில்லர் கதையை மையமாக வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்ச் செலவில் இந்த படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் வடிவுடையான் கூறுகையில்,

நடிகர் ஜீவன் நடிக்கும் முதல் ஹாரர் திரில்லர் படம் பாம்பாட்டம். இந்த படத்தின் கதையை கேட்ட நடிகர் ஜீவன் உடனே நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.

இதுவரை ஹாரர் படங்களில் பார்த்திராத திரைக்கதையை இந்த படத்தில் பார்க்கலாம். அந்தளவிற்கு கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மளையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பிரமாண்டமான முறையில் தயாராகும்
இந்தப் படத்தில் ஐந்து மொழிகளிலும் இருந்து முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள். முண்ணனி கிராபிக்ஸ் நிறுவனமொன்று இந்த படத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளை வடிவமைக்க இருக்கிறார்கள். இந்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் துவங்க உள்ளது
Conclusion:சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களில் பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.