கோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் ஆகிய மொழிப் படங்களில் பிஸியாக நடித்துவருபவர் தனுஷ். நல்ல கதை இருந்தால் போதும் படத்திற்கு மொழி அவசியம் இல்லை என சமீபத்திய பேட்டியில்கூட தனுஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தனுஷின் பாலிவுட் படமான 'அட்ரங்கி ரே' சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. இவர் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள நிலையில், செல்வராகவன் இயக்கியவரும், 'நானே வருவேன்' படத்தில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் வெங்கட் அட்லுரி இயக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் உருவாகிறது. 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார்.
வாத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 3) சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் தனுஷ், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடியாகத் தெலுங்கில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீரமே வாகை சூடும் படப்பிடிப்பு நிறைவு