ETV Bharat / sitara

தியேட்டர்ல பாக்க வேண்டிய படம்... வீட்டில் இருந்து பார்க்க போறீங்க,தாதாவின் புலம்பல்

author img

By

Published : Jun 1, 2021, 4:00 PM IST

சென்னை: 'ஜகமே தந்திரம்' திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

jagame
jagame

'ஒய் நாட்' ஸ்டுடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. தனுஷின் 40ஆவது படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு லண்டன், மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது.

2020ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி திரைக்கு வரவிருந்த இப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில், இப்படத்திலிருந்து வெளியான 'ரகிட ரகிட', 'புஜ்ஜி' உள்ளிட்ட பாடல்கள் சமூக வலைதளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றன.

படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி ரசிகர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்திருந்த நிலையில், இன்று ( ஜூன் 1) காலை படத்தின் ட்ரெய்லர் வெளியானது. புரோட்டா மாஸ்டர் சுருளி கதாபாத்திரத்தில் வரும் தனுஷ், லோக்கல் டானாக இருந்து இன்டர்நேஷனல் டானாக மாறுவது போன்ற காட்சிகளும் அதிரடி வசனங்களும் இடம் பெற்றிருந்தன. ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திலேயே சமூகவலைதளத்தில் வைரலானது. இப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 18ஆம் தேதி வெளியாகிறது.

இதுதொடர்பாக நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஒரு அற்புதமான திரையரங்க அனுபவமாக இருந்திருக்க வேண்டிய படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இருப்பினும் நீங்கள் அனைவரும் ஜகமே தந்திரம், சுருளியை ரசிப்பீர்கள் என நம்புகிறேன்" என ட்வீட் செய்துள்ளார். 'ஜகமே தந்திரம்' நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்த போதே தனுஷூக்கு அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த முடிவுக்கு பின் தனுஷ் 'ஜகமே தந்திரம்' படம் குறித்தான எந்த ஒரு தகவலையும் பகிராமல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.