சென்னை: கார்த்திக் நரேன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாறன்'. தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இதில் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்படப் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் மோஷன் போஸ்டர், பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இப்படம் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தில் பத்திரிகையாளர் ஒருவர் எதிர்கொள்ளும் சவால் குறித்து கதை உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் ட்ரெய்லர் கண்ட ரசிகர்கள், படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். மேலும் இப்படம் மார்ச் மாதம் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜகமே தந்திரம் படத்திற்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் தனுஷின் இரண்டாவது படம் மாறன் என்பது குறிப்பிடத்தக்கது.