சினிமாவில் வரிசையாக பல படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் ஹாலிவுட் திரைப்படமான 'தி க்ரே மேன்' படத்தின் படப்பிடிப்பை முடித்து அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய தனுஷ், தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'டி43' படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் உள்ளார். இப்படத்தை தொடர்ந்து அவர், தேசிய விருது பெற்ற டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'டி43' படப்பிடிப்பிற்கு இடையில் இயக்குநர் சேகர் கம்முலா, தயாரிப்பாளர் நாராயணதாஸ் நரங் ஆகியோர் தனுஷ் சந்தித்தார். தெலுங்கில் உருவாகும் இப்படம் பான்-இந்தியா மொழிகளில் வெளியாகிறது.
இதே படப்பிடிப்பின்போது 'தொழி பிரேமா', 'ரங் தே' ஆகியப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, தனுஷை சந்தித்து கதை ஒன்றை கூறியுள்ளார்.
இந்தக் கதை தனுஷுக்கு பிடித்துப்போகவே அட்லூரியின் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படத்தை சூர்யதேவர நாகவம்சி தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது.
இப்படமும் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’இணையும் தேசிய விருது பிரபலங்கள்’ - எதிர்பார்ப்பை எகிறச் செய்யும் தனுஷ்