போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்தத் திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, யோகி பாபு, கார்த்திகேயா, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட நடித்துள்ளனர். வலிமைக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ளது.
இந்தாண்டு, வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு பற்றி, போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில், வலிமை திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்திருந்தார்.
நேற்று (ஜனவரி 5), தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு, இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை இரவு நேர ஊரடங்கு போடப்படுகிறது. இந்த ஊரடங்கில் 50 விழுக்காடு பொதுப் போக்குவரத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50 விழுக்காடு பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். கரோனா நோய்த்தொற்றுக் கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள், தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம், கரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக தற்போது படத்தின் ரிலீஸ் தேதியைத் தள்ளிவைப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
-
#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 @UpadhyayHema @mynameisraahul @Gopuram_Cinemas @SonyMusicSouth#Valimai pic.twitter.com/gcMckY8Pc1
— Boney Kapoor (@BoneyKapoor) January 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 @UpadhyayHema @mynameisraahul @Gopuram_Cinemas @SonyMusicSouth#Valimai pic.twitter.com/gcMckY8Pc1
— Boney Kapoor (@BoneyKapoor) January 6, 2022#AjithKumar #HVinoth @thisisysr @BayViewProjOffl @ZeeStudios_ @sureshchandraa @ActorKartikeya #NiravShah @humasqureshi @RajAyyappamv @bani_j #Kathir @dhilipaction @editorvijay @DoneChannel1 @UpadhyayHema @mynameisraahul @Gopuram_Cinemas @SonyMusicSouth#Valimai pic.twitter.com/gcMckY8Pc1
— Boney Kapoor (@BoneyKapoor) January 6, 2022
இதற்கிடையே திரையரங்குகளில் வெளியாக இருந்த வலிமை திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்குப் படக்குழுவினரின் இந்த முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் வைரஸ் பாதிப்புகளால், இந்தாண்டு வெளியாகத் தயாராக இருந்த அஜித்தின் வலிமை தள்ளிப்போனது ரசிகர்களுக்கு மேலும் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதையும் படிங்க: Valimai release: வலிமை ரிலீஸ் தேதி எப்போது?