ETV Bharat / sitara

21 நாட்கள் ஏன் வீட்டில் இருக்க வேண்டும் - நடிகர் ஆரி தெளிவான விளக்கம்

சென்னை: அதிக ஜனத்தொகை கொண்ட நாடான இந்திய அரசாங்கத்துக்கு 21 நாட்கள் ஒத்துழைத்தால், பல உயிரிழப்புகளை, பல உறவுகளை இழக்காமல் இருப்பதற்கு உதவ முடியும் என்று கூறியிருக்கும் நடிகர் ஆரி, ஏன் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கு தெளிவாக விளக்கமும் அளித்துள்ளார்.

Actor aari explains why to stay home for 21 days
Actor Aari
author img

By

Published : Mar 26, 2020, 9:18 PM IST

இது குறித்து நடிகர் ஆரி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

நம்மை ஏன் வீட்டிலேயே முடங்கி கிடக்குமாறு கூறுகிறார்கள் என்று பலருக்கு கேள்வி எழுகிறது. இதில், நான் வெளிநாட்டுக்கோ, வெளிமாநிலத்துக்கோ செல்லவில்லை என்று சிலரும், நான் ஒரு அன்றாடகாட்சி. எனவே வேலை செய்தால்தான் பொழப்பு என்று சிலரும் கூறி வருகிறார்கள்.

இந்த 21 நாளுக்கு அப்புறம் நம் வாழ்க்கையை எந்த ஒரு பிரச்னை இல்லாமல் தொடர்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இதைக் கொடுத்துள்ளார்கள். அதேபோல் இந்த 21 நாட்களில் இந்த வைரஸை எப்படி கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்ற கேள்வியும் பலருக்கு எழுகிறது.

அவர்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக, கரோனா நான்கு வகையில் பிரிக்கப்படுகிறது. முதலாவது ஏ குரூப். வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களின் பயணக்குறிப்புகளை கண்காணித்து சிகிச்சை அளிப்பது.

இரண்டாவதாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் எந்தெந்த இடங்களுக்குச் சென்றார்கள் என்பதை கண்காணிக்க முடியாத வகையாக பி குரூப் உள்ளது.

கரோனா அறிகுறி என்பது 16 நாட்களுக்குப் பிறகுதான் நமக்கு தெரியவரும் எனச் சொல்லப்படுகிறது. அது இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மூலம் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்படும் வரை தங்களுக்கு பாதிப்பு இல்லை என்றே அவர்களுக்கு தோன்றும். எனவே இந்த பி குரூப் மிகவும் ஆபத்தானது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரையெல்லாம் பார்த்தார், பேசினார் என்பதை கண்டறிந்து அவர்களில் யாரெனும் பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை அளிப்பதுதான் சி குரூப்.

யாருக்கும் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று அரசாங்கம் சொல்லும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வீட்டிலேயே இருப்பவர்கள் டி குரூப். இவர்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்லும்போது, பி குரூப் நபர்களால் பரப்பப்பட்டு பாதிப்படைவார்கள்.

அந்த வகையில் தனக்கு கரோனா பாதிப்பு இருக்கிறது என்று தெரியாமலேயே இருக்கும் நபர்களை கண்டறிவது அரசாங்கத்துக்கு பெரிய சவாலாக இருக்கிறது.

எனவே இவர்களை கண்டறிய ஒரே வழி 21 நாட்கள் நாம் வீட்டிலேயே முடங்கி கிடக்கும்போது, கரோனா பாதிப்பு நமக்கு இருந்தால் அறிகுறியாக வெளியே தென்படும். இதன் பின்னர் மருத்துவர்களை தொடர்புகொண்டு உரிய சிகிச்சை பெற்று நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது.

எனவே இதை அலட்சியப்படுத்திக்கொண்டு வெளியே சுற்ற வேண்டாம். ஏ, சி குரூப் நபர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கமுடியும், டி குரூப் வெளியே சென்று பி குரூப் நபர்களால் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எனவே பி குரூப் மக்களிடமிருந்து தற்காத்துக்கொண்டு அவர்களை கண்டறிய ஒரே வழி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதுதான்.

இதைச் செய்யத் தவறினால் பலபேர் தனது தந்தை, தாய், தங்கை. தாத்தா, பாட்டி இவர்களில் யாரையாவது இழக்க நேரிடும். தயவுசெய்து அப்படியொரு சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.

அதிக ஜனத்தொகை கொண்ட நாடான இந்திய அரசாங்கத்துக்கு 21 நாட்கள் ஒத்துழைத்தால், பல உயரிழப்புகளை, பல உறவுகளை இழக்காமல் இருப்பதற்கு உதவ முடியும்.

ஒரு இந்திய குடிமகனாக இந்தச் சவாலை உங்கள் முன் வைக்கிறேன். நமக்காக காவலர்கள், மருத்துவர்கள், துப்புறவு பணியாளர்கள், அரசு அலுவலர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Actor aari explains why to stay home for 21 days

இதையும் படிங்க: பிறந்தநாளில் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரெட்டச்சுழி ஆரி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.