ETV Bharat / sitara

’ஒத்த செருப்பு’ பட ரீமேக் ஷூட்டிங்: விபத்தில் சிக்கிய அபிஷேக் பச்சன்

சென்னை: 'ஒத்த செருப்பு' இந்தி ரீமேக்கில் நடித்து வரும் அபிஷேக் பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் அவரது ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அபிஷேக் பச்சன்
அபிஷேக் பச்சன்
author img

By

Published : Aug 23, 2021, 10:03 AM IST

Updated : Aug 23, 2021, 10:18 AM IST

'கோடிட்ட இடத்தை நிரப்புக' படத்திற்குப் பிறகு பார்த்திபன் இயக்கி, நடித்த திரைப்படம் 'ஒத்த செருப்பு'. இப்படத்தை பார்த்திபன் தனி ஆளாக நடித்து, இயக்கி, தயாரித்து தன் முயற்சியால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகப் பிரபலங்கள் பலரிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. இதனையடுத்து 'ஒத்த செருப்பு' திரைப்படம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

இந்தியில் பார்த்திபன் இயக்கத்தில் அபிஷேக் பச்சன் இப்படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பின்போது நடிகர் அபிஷேக் பச்சனுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மருத்துவர்கள் அவரை சில நாள்களுக்கு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

அவர் குணமடைந்தவுடன் மீதமுள்ள படத்தின் காட்சிகள் படமாக்கப்படும் எனத் தெரிகிறது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கட் சந்திரா இயக்க, பண்ட்லா கணேஷ் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: HBD மோகன்: 80களின் வெள்ளி விழா நாயகன், நடிகைகளின் அம்மாக்களின் ஃபேவரைட் ஹீரோ!

Last Updated : Aug 23, 2021, 10:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.