ETV Bharat / sitara

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 83 ட்ரெய்லர்

author img

By

Published : Nov 30, 2021, 12:08 PM IST

நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகியுள்ள '83' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.

83 ட்ரெய்லர்
83 ட்ரெய்லர்

இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற கதையை அடிப்படையாக வைத்து '83' திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிகர் ரன்வீர் சிங் நடித்துள்ளார். கபில் தேவின் மனைவி கதாபாத்திரத்தில் ரன்வீர் மனைவியும், நடிகையுமான தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இதேபோல் அத்தொடரில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்த் வேடத்தில் கோலிவுட் நடிகர் ஜீவா நடித்துள்ளார். '83' படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்நிலையில் '83' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. கபில்தேவாக நடிகர் ரன்வீர் சிங் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். ட்ரெய்லரைப் பார்த்த பலரும், ரன்வீர் சிங் தவிர இந்தக் கதாபாத்திரத்தை மற்ற யாரும் இவ்வளவு கச்சிதமாக நடித்திருக்க முடியாது என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்றுள்ள இப்படம் டிசம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழில் Y NOT ஸ்டூடியோஸ், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

இதையும் படிங்க: ரன்வீர் சிங்கின் '83' படத்துக்காக விட்டுக்கொடுத்த அல்லு அர்ஜுனின் 'புஷ்பா'!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.