சென்னையை அடுத்த நங்கநல்லூர் ராம்நகரில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்றுவருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி தற்போது இப்பள்ளி வளாகத்தில் காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சிசிடிவி கேமராக்களின் இயக்கப் பணிகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நேற்று பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திரைப்பட இயக்குநர் பேரரசு, பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தைத் தொடங்கிவைத்தார். அதோடு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், மரக்கன்றுகள் ஆகியவற்றையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இயக்குநர் பேரரசு, ”விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவிவருவதால் அதற்காக விழிப்புணர்வு நடத்தப்பட்டு மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. அனைத்துப் பள்ளிகளும் இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குழந்தைகளின் பாதுகாப்புக்காக அரசுப் பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு அரசு நல்ல முறையில் செயல்பட்டுவருகிறது. ஆனால், 5,8ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுமுறை ஒரு அறிவாளியை உருவாக்குமே தவிர, நல்ல புத்திசாலியை உருவாக்காது. இது ஆபத்தை விளைவிக்கும். இந்த விவகாரத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மறுபரிசீலனை செய்யவேண்டும்” என்றார்.
'சூர்யவன்ஷி' படப்பிடிப்புக்கிடையே படப்பிடிப்புத் தளத்தை சுத்தம் செய்த கத்ரீனா