பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பிரியங்கா சோப்ரா சமீபத்தில் நடைபெற்ற 62ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அந்த நிகழ்கிக்கு வெள்ளை நிறத்தில், மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து சென்றுள்ளார். அந்த உடை மிகவும் மோசமாக இருந்தது என்று கோலிவுட் ரசிகர்கள் பலரும் பிரியங்காவை திட்டித் தீர்த்தனர். அந்த உடை ஏற்கனவே ஜெனிபர் லோபஸ் என்பவர் அணிந்திருந்தார் எனவும் விமர்சிக்கப்பட்டது.
பிரியங்கா சோப்ராவின் ஆடையை விமர்சித்து, பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் வென்டெல் ரோட்ரிக்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். ஆனால், அவரின் பதிவு சர்ச்சைக்கு உள்ளானதையடுத்து உடனே அதனை நீக்கிவிட்டார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இந்த நிலையில், பிரியங்கா சோப்ரா ஆடை குறித்து தான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என்று கூறி வென்டெல் ரோட்ரிக்ஸ் தற்போது மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “என்னைப் பற்றி தவறாகப் பேசியவர்களுக்கான பதிவுதான் இது. அவரது உடல் பற்றி நான் ஏதாவது பேசினேனா? நிறைய பெண்கள் பேசினார்கள். ஆனால் நான் அவரது ஆடை பற்றி மட்டுமே பேசினேன். சில ஆடைகளை அணிய ஒரு வயது இருக்கிறது. எனது பதிவுகள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை உங்களில் பிந்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கேக் வெட்டி படப்பிடிப்பை முடித்த 'பாகி 3' டீம்