ஹைதராபாத்: கரோனா சூழலில் மக்களுக்கு உதவும் ரித்திக் ரோஷனை நடிகை டிவிங்கிள் கன்னா பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து டிவிங்கிள் கன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில், பலருக்கும் உதவி வருகிறார் ரித்திக் ரோஷன். அவர் செய்யும் உதவியில் சிறிதளவேனும் நானும் செய்து வருகிறேன். உங்கள் சேவை தொடரட்டும் ரித்திக் ரோஷன் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கரோனா சூழலில் மக்களுக்கு உதவிய ஸ்காட்டிஷ் நடிகர் ஜேம்ஸ் மெக்வோய்-ஐ டிவிங்கிள் கன்னா பாராட்டியிருந்தார். தற்போது ரித்திக் ரோஷனை பாராட்டி, பலரையும் மக்களுக்கு உதவும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
டிவிங்கிள் கன்னாவின் கணவர் அக்ஷய் குமார், 100 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை நிவாரணமாக அளித்து உதவியது குறிப்பிடத்தக்கது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">