ஹைதராபாத் : பிரபல இயக்குனர் விவேக் அக்னிகோத்ரி (Vivek Agnihotri) டைரக்ஷனில் வெளியாகியுள்ள தி காஷ்மீர் ஃபைல்ஸ் (Kashmir Files) திரைப்படம் பாகுபலி 2ஆம் பாகத்துக்கு இணையாக வசூலை அள்ளி குவித்துவருகிறது. அக்ஷய் குமாரின் பட்சன் பாண்டே (Bachchan Paandey) வெளியான நிலையிலும் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
இது தொடர்பாக பிரபல விநியோகஸ்தர் டாரன் ஆதர்ஸ் (Taran Adarsh) பகிர்ந்துள்ள தகவலில், “தி காஷ்மீர் ஃபைல்ஸ் வரலாறு படைக்கிறது. படம் வெளியாகி 8ஆவது நாளில் ₹.19.15 கோடி வசூலித்துள்ளது. இதே தினத்தில் பாகுபலி-2 ₹19.75 கோடி வசூலித்து இருந்தது.
-
#TheKashmirFiles creates HISTORY… *Day 8* of #TKF [₹ 19.15 cr] is AT PAR with #Baahubali2 [₹ 19.75 cr] and HIGHER THAN #Dangal [₹ 18.59 cr], the two ICONIC HITS… #TKF is now in august company of ALL TIME BLOCKBUSTERS… [Week 2] Fri 19.15 cr. Total: ₹ 116.45 cr. #India biz. pic.twitter.com/sjLWXV78J9
— taran adarsh (@taran_adarsh) March 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#TheKashmirFiles creates HISTORY… *Day 8* of #TKF [₹ 19.15 cr] is AT PAR with #Baahubali2 [₹ 19.75 cr] and HIGHER THAN #Dangal [₹ 18.59 cr], the two ICONIC HITS… #TKF is now in august company of ALL TIME BLOCKBUSTERS… [Week 2] Fri 19.15 cr. Total: ₹ 116.45 cr. #India biz. pic.twitter.com/sjLWXV78J9
— taran adarsh (@taran_adarsh) March 19, 2022#TheKashmirFiles creates HISTORY… *Day 8* of #TKF [₹ 19.15 cr] is AT PAR with #Baahubali2 [₹ 19.75 cr] and HIGHER THAN #Dangal [₹ 18.59 cr], the two ICONIC HITS… #TKF is now in august company of ALL TIME BLOCKBUSTERS… [Week 2] Fri 19.15 cr. Total: ₹ 116.45 cr. #India biz. pic.twitter.com/sjLWXV78J9
— taran adarsh (@taran_adarsh) March 19, 2022
இதேபோல் இரண்டாவது வாரத்தில் தங்கல் படம் ₹.18.59 கோடி வசூலித்து இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார். தனித்துவமான படமாக விளங்கும் தி காஷ்மீர் ஃபைல்ஸ், வெளியான முதல் வாரத்திலே ₹.100 கோடி படங்களின் வரிசையில் இணைந்தது.
இந்தப் படத்தில் அனுபவம் கெர் (Anupam Kher), மிதுன் சக்ரபோர்த்தி (Mithun Chakraborty), பல்லவி ஜோஷி (Pallavi Joshi) உள்ளிட்ட மூத்த நடிகர்களும் தனது பங்களிப்பை அளித்துள்ளனர்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் இந்தி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் படம் 1990களில் ஜம்மு காஷ்மீரில் பண்டிட்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு உத்தரப் பிரதேசம், திரிபுரா, கோவா, ஹரியானா, கர்நாடகா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் வரி விலக்கு அளித்துள்ளன.
இதையும் படிங்க : என்னுள்ளே.. என்னுள்ளே... மனம் திறந்த இளையராஜா...!