சமீபகாலமாக இந்திய திரையுலகில் விளையாட்டை மையப்படுத்தி அதிக படங்கள் எடுக்கப்பட்டுவருகின்றன. தற்போது நடிகை டாப்ஸி தடகள வீராங்கனை ஒருவரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்க உள்ள படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழ் இயக்குநர் நந்தா பெரியசாமி கதையில் இயக்குநர் ஆகார்ஷ் குரானா இயக்கும் இப்படத்திற்கு 'ராஷ்மி ராக்கெட்' எனப் பெயர் வைத்துள்ளனர். ஒட்டப்பந்தய வீராங்கனையாக டாப்ஸி இதில் நடிக்கிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக டாப்ஸி பன்னு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், "நான் இந்தத் திட்டத்தில் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஈடுபட்டுள்ளேன், இதனால் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கும் முன்பே நான் இப்படத்திற்காக உடற்பயிற்சியும் தடகள பயிற்சியிலும் ஈடுபட்டேன். தற்போதைய இது எனக்கு ஒரு நீண்ட இடைவெளியாகும். இதற்குப் பின் நான் மீண்டும் எனது பணியை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என டாப்ஸி தெரிவித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் அகர்ஷா குரானா கூறுகையில், நாங்கள் விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதை நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பயணத்தை தொடங்க நானும் எனது அணியினரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இது ஒரு பயங்கரமான கதை நான் உங்களிடம் சொல்ல உற்சாகமாக இருக்கிறேன்.
இந்தப் படத்திற்கான முக்கியக் கதாபாத்திரத்தில் பிரியான்ஷு பெய்னுலி நடிக்கிறார். நேஹா ஆனந்த், பிரஞ்சல் காந்தியா ஆகியோருடன் ரோனி ஸ்க்ரூவாலா தயாரிக்கும் இப்படம் 2021ஆம் ஆண்டு திரைக்கு வர உள்ளது.
படப்பிடிப்பிற்குத் தயாரான 'ரஷ்மி ராக்கெட்' டாப்ஸி பன்னு
மும்பை: டாப்ஸி பன்னு நடிப்பில் உருவாக உள்ள 'ரஷ்மி ராக்கெட்' படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.