ETV Bharat / sitara

விவசாயம் செய்ய சுஷாந்த் விருப்பினார் - முன்னாள் காதலி உருக்கம்! - சுஷாந்த் விவசாயம் செய்ய விரும்பியதாக அங்கிதா தகவல்

நடிகர் சுஷாந்துக்கு மகிழ்ச்சியான நபர் என்றும் அவருக்கு மன உளைச்சல் இருந்தது என்று கூறுவது முற்றிலும் தவறு என மறைந்த சுஷாந்தின் முன்னாள் காதலி அங்கிதா லோக்கண்டே தெரிவித்தார். மேலும் சுஷாந்த் விவசாயம் செய்ய விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

sushant is not a someone who commits suicide says Ankita Lokhande

author img

By

Published : Aug 1, 2020, 7:49 PM IST

நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒரு மாத காலம் கழித்து, அவரது முன்னாள் காதலியான அங்கிதா லோக்கண்டே தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற பேட்டி ஒன்றில் அங்கிதா கூறுகையில், "சுஷாந்த் தற்கொலை செய்துகொள்ளுகிற ஆள் கிடையாது. நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் மிகவும் மோசமான சூழ்நிலைகளை கடந்து வந்துள்ளோம். அவர் எதையும் உற்சாகமான கடந்துச் செல்லும் மனிதராக இருந்தார். எனக்கு தெரிந்த வரையில் அவர் மன உளைச்சல் கொண்ட நபர் கிடையாது. தனது கனவுகள் குறித்து டைரியில் எழுதி வைத்துக்கொள்ளுவது போன்ற ஒரு நபரை நான் இதுவரை பார்த்தது கிடையாது. அவரது டைரியில் 5 ஆண்டுகளுக்கான திட்டம் இருந்தது. அவர் என்ன செய்யப்போகிறார், எப்படி இருப்பார் போன்றவை எழுதப்பட்டிருக்கும்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அவர் பெயருக்குப் பின்னால் மன அழுத்தம் என்று கூறும்போது, மனமுடையச் செய்கிறது. ஒருவேளை அவர் வருத்தத்தில் இருந்திருக்கலாம். ஆனால் மன அழுத்தம் என்பது பெரிய சொல். ஒருவரை பைப்போலார் (bipolar) என்று அழைப்பது மிகவும் பெரிது" என்று அங்கிதா தெரிவித்தார்.

சுஷாந்த் குறித்து பேசுகையில், "எனக்கு தெரிந்த சுஷாந்த், ஒரு சிறிய ஊரில் இருந்து வந்தவர். அவர் தன்னை தானே மேம்படுத்திக்கொண்டார். எனக்கு நடிப்பு உள்பட பலவற்றை கற்றுக்கொடுத்தார். யாருக்காவது உண்மையான சுஷாந்த் யார் என்று தெரியுமா? ஒவ்வொருவரும் அவர்களுக்கு தெரிந்த வகையில் சுஷாந்த் மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறுகின்றனர். அவற்றையெல்லாம் படிக்கும்போது மனம் வலிக்கிறது.

அவர் சிறு விஷயங்களில் கூட மகிழ்ச்சியை கண்டுபிடிப்பவர். விவசாயம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு மன அழுத்தம் கிடையாது. அவர் எந்த சூழ்நிலையில் இருந்தார் என்பது எனக்கு தெரியாது. சுஷாந்த் ஒரு ஹீரோ" என்றார்.

இதையும் படிங்க...பரிந்துரைக்கப்படாத மாத்திரைகளை சுஷாந்துக்கு கொடுத்தாரா ரியா- உடற் பயிற்சியாளர் பகீர் தகவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.